(எம்.எஸ்.எம். ஸாகிர்)
நடந்து முடிந்த க.பொ.த.(சா/த) பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்த கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன்
எம்.ஏ.எம். சஹீத் என்பவரையும், பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களையும் இஸ்லாமாபாத் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பாராட்டிக் கௌரவித்தனர்.
இதன்போது மாணவனுக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு, பாடசாலை அதிபர் அவர்களும் நினைவுச் சின்னம் வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.
மேலும் இந்நிகழ்வில், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


