பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு! கல்முனை மாநகரில் இன்று கையெழுத்து வேட்டை!

( வி.ரி.சகாதேவராஜா)
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சம உரிமை இயக்கம்
கல்முனை மாநகரில் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை பகல் கையெழுத்து வேட்டையொன்றை நடாத்தியது.

அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை நீதி வேண்டும் மற்றும் அனைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை தொங்கவிடப்பட்டிருந்தன.

இதன் போது பலரும் தாமாகவே முன்வந்து கையொப்பமிட்டதுடன் கருத்துக்களையும் தெரிவித்தனர்.