(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.நஸீல் ஏற்பாட்டில், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் தலைமையில் வியாழக்கிழமை (17) பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது, நிறைய விடயங்கள் தீர்மானங்களாக
நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


