மட்டக்களப்பில் இடம்பெற்ற மாவட்ட மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

49 வது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட மட்ட மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி மட்டக்கப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுத்தன் (காணி) தலைமையில் வெபர் விளையாட்டு மைதானத்தில் இன்று (12) ஆரம்பமாகியது.

மாவட்டத்தில் உள்ள வீரர்களின் திறமைகளை வெளிக்காட்டும் அரங்காக இப் போட்டிகள் காணப்பட்டன.

எதிர்வரும் 49 வது . விளையாட்டு விழாவானது கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் இப் போட்டிகளில் பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்காட்டவுள்ளனர்.

ஓட்டப்போட்டி, ஈட்டி எறிதல், உயரம் பாய்தல், நீளம் பாய்தல், பரிதி வட்டம் எறிதல் போன்ற பல போட்டிகள் இதன் போது இடம் பெற்றதுடன், போட்டியில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம் பெற்றது.

இந்திகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஐஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாள் என்.தனஞ்ஜெயன் கலந்து சிறப்பித்ததுடன் வெற்றியாளர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்துள்ளனர்.