பாறுக் ஷிஹான்
கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு “ஸ்மார்ட் போர்ட்” கையளிக்கும் சிறப்புவிழா இன்று(12) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக பங்கேற்றார்.
இந் நிகழ்வு அதிபர் ஏ.எச். அலி அக்பர் தலைமையில் இடம்பெற்றதுடன் YWMA அமைப்பின் தலைவி பவாஷா தாஹா மற்றும் CSMWA அமைப்பின் தலைவி சீனியா தாஷிம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், ஸ்மார்ட் போர்ட் உத்தியோகபூர்வமாக பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.
இந்த சிமாட் டீவி வழங்கும் செயற்பாட்டிற்கு தமது மண்ணுக்கு ஒரு மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் டீவியை எங்களது கெளரவ ரஹ்மத் மன்சூர் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இந்நிகழ்வு, மாணவர்களின் எதிர்கால கல்விப் பயணத்திற்கு ஒரு புதிய திசையைத் தரும் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.


