க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்; நைடா காரியாலயங்களில் தேசிய ரீதியாக முன்னெடுப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவில் உருவான “இலங்கையை சுத்தமாகவும், பசுமையாகவும், மற்றும் சுகாதாரமாகவும் மாற்றுதல்” எனும் வேலைத்திட்டம் மூன்றாம்நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழுள்ள 09 நிறுவனங்களும் அகில இலங்கை ரீதியாக 311 நிலையங்களில் (04) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.