இன்று கதிர்காமத்தில் யானையின் உதவியுடன் பாரம்பரிய பந்தலிடும் நிகழ்வு

( வி.ரி. சகாதேவராஜா)

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் கதிர்காமம் பெரிய
கோவிலில் வருடமொருமுறை ஆதிவாசி வேடுவகுல மக்களால் பச்சைப் பந்தலிடும் வைபவம். இன்று (01) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அங்கு பாரம்பரிய
நிகழ்வுகளான யானைகள் மூலம் பந்தலுக்கான மரம்செடி கொடிகள் மாணிக்கங்கையூடாக
சுத்தமாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன.

ஆலய நிலமே நிருவாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அக் கொத்துக்களை யானைகள் உதவியுடன் பாரம்பரிய வேடுவகுலமக்கள் சகிதம் பந்தல் மேய்ந்தார்கள்.