மட்டக்களப்பில் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறியும் வழிகாட்டலும்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பில் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறியும் வழிகாட்டல் நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையின் கீழ் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மேற்பார்வை உத்தியோகத்தர் ரீ. நிலோஷன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30) இடம் பெற்றது.

ஆர்வமுள்ள சிறு தொழில் முயற்சியாளர்களின் தொழில் முயற்சியை கட்டி எழுப்பும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள சுய தொழில் முயற்சியாலர்களின் திறனை விருத்தி செய்யும் நோக்குடன் இப் பயிற்சி நெறி இடம் பெற்றன.

இந் நிகழ்வின் வளவளாராக இருதயநாதன் தர்ஷனாவினால் “Nail extension” தொடர்பான நுணுக்கங்கள் மற்றும் செயல் முறை தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன்.

இந் நிகழ்வில் சிறு தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி ரீ.சுகந்தனா மற்றும் திருமதி.எஸ் . தர்சினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.