மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வருமானத்தை அதிகரித்தார் தவிசாளர்.
ம.தெ.எ பற்று பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களை அழைத்து சபா மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ம.தெ.எ பற்று பிரதேசத்தில் உள்ள ஆலயங்களை அழைத்து கருத்தூரையாற்றும்போது பிரதேசத்திற்குட்பட்ட மக்களுடைய செயற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான சேவைகளை வழங்குவதில் பிரதேச சபைக்கான வருமானம் போதிய அளவு போதாமையாக உள்ளது இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
அது மாத்திரம் இன்றி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளமானது கடந்த காலங்களில் அரசினால் முழுமையாக வழங்கப்பட்டது தற்போதைய அரசாங்கம் சம்பளத்தினை வழங்குகின்ற போது சபையிலே கடமையாக்குகின்ற அத்தனை ஊழியர்களுக்குமான சம்பளத்தில் 20% மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளது இதனால் எமது பிரதேசத்தில் மக்களிடம் அவிடப்படுகின்ற வரிப்பணத்தில் சம்பளத்திற்கும் செலவிடப்படுகின்றது. இதனால் மக்களுக்கான சேவைகளை முழுமையாக வழங்க முடியாது. எனவே பிரதேசத்தில் உள்ள ஆலயங்களுக்கு வருகின்ற வருமானங்களில் பிரதேச சபைக்கும் குறிப்பிட்டளவு வழங்குவதன் ஊடாக சேவைகளை வழங்க முடியும்.
ஆலயங்கள் சார்பாக கலந்து கொண்ட தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு அமைவாக ஆலயங்களில் வருகின்ற வருமானத்திலிருந்து 30% சபைக்கு வழங்குவதென்றும் ஏனைய முச்சக்கர வண்டி உந்துருளி வாகன பாதுகாப்பினை சபையின் ஊடாக மேற்கொள்வது என்றும் வியாபார வரியினை கடந்த காலங்களைப் போன்று அரவிடுவது என்றும் பங்கு பற்றிய நிர்வாக சபை உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





