(கஜனா சந்திரபோஸ் )
காளி கோயிலை இடித்து மீன் சந்தையை கட்டிய ஹிபுல்லா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸுடன் இனைந்து வாகரை பிரதேச சபையை பறிகொடுக்க முடியாது எனவும் தமிழர்களாக ஒன்றிணைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பும் இலங்கை தமிழரசு கட்சியும் அல்லது ஏனைய தமிழர்களும் ஒன்றுபட்டு ஆட்சியை கைப்பற்றுவதன் மூலமாக தான் வாகரை தமிழர்களின் நிலத்தையும் நிர்வாகத்தையும் பாதுகாக்க முடியும் என நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தின் செயலாளர் கோபாலன் பிரசாத் தெரிவித்துள்ளார்
இன்று காலை பாண்டிருப்பில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினுடைய ஊடக சந்திப்பின் போது அவர் கருத்தினை தெரிவித்து இருந்தார்.
இன்று இனத்தினுடைய இறப்பு அபிவிருத்தி வாழ்வாதார உதவிகள் என பலதரப்பட்ட சேவைகளை நாங்கள் கடந்த மூன்று வருடங்களாக செய்து வருகின்றோம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பாக அந்தந்த கட்சிகள் தங்களுடைய அற்ப சொற்ப சலுகைகளுக்காக ஆட்சி அமைக்கின்ற ஒரு சூழல் இருந்து வருகின்றது . நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியம் வாகரை பிரதேச சபை தமிழர்களின் இதய பூமியாக கருதுகின்றது.
தமிழர் கூட்டமைப்பு ஏழு ஆசனங்களையும் இலங்கை தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் தலா 2ஆசனங்களையும்
வாகரைப் பிரதேசத்தில் பெற்றுள்ளன.
குறிப்பாக இன்று இலங்கை தமிழரசு கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளதாகவும் ஆட்சி அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிந்திருந்தோம் .இருந்தாலும் இலங்கை தமிழரசு கட்சி தடம் மாறி மாற்று சமூகத்துடன் இன்று கைகோர்த்து இருக்கிறது என்றால் மிகவும் கவலையாக இருக்கின்றது. வாகரை பிரதேசசபை நிலம் பாதுகாக்கப்பட வேண்டும் அந்த நிர்வாகத்தை தமிழர்கள் ஆள வேண்டும்.
முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றுபட்டு இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் என்பது இவரு இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதுவப்படுத்துகின்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா எங்களுடைய காளி கோயிலை இடித்து மீன் சந்தையை கட்டிய ஒருவர் அவருடன் கூட்டு உறவு வைத்துள்ளனர். அது மட்டுமல்லாது கல்முனைத் தமிழர்களின் இதய பூமியான வடக்கு பிரதேச செயலத்தை தரம் உயர்த்தாமல் தடுத்து வைத்திருப்பது சிங்கள பேரினவாத அரசு அல்ல இந்த முஸ்லிம் காங்கிரஸ்தான். வீர தமிழர்கள் வாழுகின்ற வீர முனை பிரதேசத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான அடையாளத்தை இந்துக்களுக்குச் சொந்தமான அடையாளமான வரவேற்பு கோபுரத்தை நிறுவுவதற்கு தடை செய்து அங்கு தமிழர்கழோடு முரண்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள். இப்படியானவர்களுடன் கூட்டுச் சேர்ந்து வாகரையிலும் ஏனைய பிரதேசங்களிலும் ஆட்சி அமைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏறாவூர் செங்கலடி வாழைச்சேனை போன்ற இடங்களில் ஆட்சி அமைத்திருக்கின்றார்கள் அங்கு தமிழ் பிரதிநிதித்துவம் இருக்கின்றது ஆனால் எங்களுடைய புதை குழியில் நின்று அரசியல் செய்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு கூட்டு சேர்ந்திருப்பது நாம் தமிழர் அமைப்பிற்கு மனவேதனையும் மிகவும் துக்ககரமான செயலாகவும் இருக்கின்றது இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் .
வாகரை பிரதேச சபையில் தேர்ந்தெடுக்கின்ற தமிழரசு கட்சி உறுப்பினர்களை நீங்கள் உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் முஸ்லிம் காங்கிரஸோடு உங்களை வழிநடத்துகின்ற தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களைப் பிழையாக வழி நடத்துகின்றார்கள் ஆனால் வடக்கிலே குறிப்பாக டக்ளஸ் விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்று யாரோடு கூட்டிச் சேர்ந்த வடக்கில் தலைநிமிர்ந்து நிற்கின்றீர்கள். ஆனால் கிழக்கில் அவ்வாறு அல்ல நாளுக்கு நாள் நிலம் பறி போகின்றது .நாளுக்கு நாள் எங்களுடைய இந்து தமிழ் பெண்கள் மதம் மாறிக் கொண்டிருக்கின்றார்கள்.
பொருளாதாரத்தில் முஸ்லிம்கள் தன்னிறைவடைந்திருக்கின்றார்கள் தமிழர்கள் இன்றும் நடுத்தெருவில் நிற்கின்றார்கள் ஆகவே தான் நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியம் சொல்கின்றது வாகரை பிரதேச சபையில் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்ற கௌரவ உறுப்பினர்கள் நீங்கள் சிந்தித்து தமிழர்களாக ஒன்றுபட எத்தனியுங்கள். நீண்ட தூரம் பயணிக்க கூடிய கிழக்கு தமிழர்களுடன் ஒன்றிணைந்து உங்களிடம் அதிகாரங்களை தருகின்றோம். நீங்களே அதிகாரங்களை கைப்பற்றுங்கள் இருந்தாலும் தமிழர்களாக ஒன்றுபடுங்கள் என கேட்டுக்கொள்கின்றோம். கிழக்கு தமிழர்களோடு ஒன்றிணையாவிட்டாலும் என் பி பி கட்சியில் மூன்று தமிழர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களோடு இணைந்தாவது உங்களுடைய நிலத்தையும் வளத்தையும் பாதுகாப்பதற்கு தமிழர்களாக ஒன்றிய வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்திருந்தார்.


