வி.சுகிர்தகுமார்
கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை திறப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரெட்ணசேகர கலந்து கொண்டு காட்டுவழிப்பாதையினை இன்று அதிகாலை (20) திறந்து வைத்தார்.
நிகழ்வில் அம்பாரை மாவட்ட உதவி அரசாங்க அதிபர சி.ஜெகராஜன் லாகுகல பிரதேச செயலாளர் நவனீதராஜா உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க யாத்திரிகர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீP க.கு.சீதாராம குருக்கள் நடாத்தி வைத்ததன் பிற்பாடு காட்டுவழிப்பாதை திறப்பு கழகு மலை பத்துப்பாடி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இன்று 20ஆம் திகதி திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜுலை 04 ஆம் திகதி மூடப்படுகின்றது.
இதேநேரம் இவ்வருடம் சுமார் 50000 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கும் நிலையில் இன்று சுமார் 2000 ஆயிரம் பக்தர்கள் காட்டு வழிப்பாதையின் ஊடாக யாத்திரையினை தொடர்ந்தனர்.
பொலித்தீன் பாவனை மற்றும் சிறிய தண்ணீர்போத்தல்களை கொண்டு செல்வதை தடை செய்துள்ளதாகவும் கருத்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுவர் தொடக்கம் முதியவர்கள் வரை ஆண்;கள் பெண்கள் என அனைவரும் கலாசார ஆடையுடன் மாத்திரம் யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


