முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மத் 104-வது பிறந்த நாள் நிகழ்வு

முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மத் அவர்களின் 104-வது பிறந்த நாளை முன்னி்ட்டு ஸ்ரீ லங்கா இஸ்லாமிய நிலையத்தினால் நேற்று (15)இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூட பண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு சர்வமத தலைவர்களான ஜப்பான் சங்கநாயக கெளரவ BபானGகல உபதிஸ்ஸ நாயக தேரர், கெளரவ கலாநிதி கலகம தம்மரன்சி நாயக தேரர், கெளரவ உபநந்த நாயக தேரர், கலாநிதி சிவ ஸ்ரீ பாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, பேராயர் ஜே. ஞானராஜா பாதிரியார் உட்பட சர்வ மத தலைவர்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூஸுப், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மத் அவர்ளின் புதல்வர்களான ஷாஹுல் ஹமீத் முஹம்மத், ஹுசைன் முஹம்மத், டாக்டர் ருவைஸ் ஹனீபா உட்பட குடும்ப உருப்பினர்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு விஷேட விருந்தினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.