(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் அனுசரணையோடு எலைற் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடாத்தும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி (ELITE MEGA TROPHY -2025 Season-3 இன்று (13) வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
அணிக்கு 11 பேர் கொண்ட 7 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி யாக நடைபெறவுள்ள இந்த சுற்றுப் போட்டி பகல் – இரவு போட்டிகளாக மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. மருதமுனை கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 20 கிரிக்கெட் அணிகள் இந்த சுற்று போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு என்பன எதிர்வரும் வாரம் மிக கோலாகலமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பியனாக தெரிவு செய்யப்படும் அணிக்கு பெறுமதி வாய்ந்த சம்பியன் வெற்றிக் கிண்ணம் மற்றும் ரூபா 20.000/- ஆயிரம் பெறுமதியான காசோலை வழங்கப்படவுள்ளது. இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு வெற்றிக் கிண்ணம் ரூபா 10,000/- ஆயிரம் பெறுமதியான காசோலை வழங்கப்படவுள்ளது. இதேவேளை சுற்றுப் போட்டியின் சிறந்த வீரர், அதேபோல் சுற்றுப்போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த துடுப்பாட்ட வீரர், 39 போட்டிகளுக்குமான சிறந்த வீரர் ( man of the match ), சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட மிகவும் ஒழுக்கமுள்ள அணி, சிறந்த களத்தடுப்பாளர் என பல்வேறு பரிசு திட்டங்களும் அறிமுகமாகி வழங்கி வைக்கப்படவுள்ளது.
சுற்று போட்டி தொடர்பான அங்குரார்பண அறிமுக நிகழ்வு மருதமுனை கிறீன் லீப் வரவேற்பு விடுதியில் கழகத்தின் தலைவரும், மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் செயலாளருமான எம். ஐ. நஜிமுல் றியாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கழகத்தின் சுற்று போட்டி குழு தலைவர் நசீம் கான், முகாமையாளர் ஐ.எல்.எம்.முபீன், அனுசரணையாளர்கள், மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் நிருவாகத்தினர், போட்டிகளில் கலந்து கொள்ளும் கழகங்களின் அணித்தலைவர்கள் , ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


