சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்_

சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் புதுக் குடியிருப்பு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் Sihina Sri Lanka நிகழ்ச்சி இன்று (12) நடைபெற்றது.

ESPD திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளில் உள்வாங்கப்பட் ட மாற்றுத்திறனாளிகள், தொழில் தருணர்கள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைத்து குறித்த நிகழ்வு நடத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் பணிபுரியும் போது எதிர்கொள்ளும் சவால்கள், தொழில் தருனர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்கள் சவால்களைத் தீர்க்கும் வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் திறன்களை வளர்க்க பல்வேறு விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.குறித்த திட்டம் மாவட்டத்தின் இரண்டாவது நிகழ்வாகும்.

இவ் நிகழ்வில் சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.பிரணவன் ,தம்பலகாமம் பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்