வாஸ் கூஞ்ஞ) 12.06.2025
மன்னார் தென் கடற்பிராந்திய பகுதியில் வியாழக்கிழமை (12.06) அதிகாலை தொடக்கம் இங்குள்ள சகல இறங்குத் துறைகளிலும் கப்பல் கழிவுகள் ஒதுங்கி வருவது கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்த கப்பல் கழிவுகள் இரசாயன பதார்த்தங்களாகவும் காணப்படுகின்றது. இவைகள் பொலித்தீன் தயாரிப்தற்கு பயண்படுத்தப்படும் மூலக்கூறுகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதைத் தவிர ஏனைய இரசாயன பதார்த்தங்கள் , கொள்கலங்கள் போன்றவைகளும் கரையில் ஓதுங்கக்கூடும்.
ஆகவே கரையோரங்களில் வாழும் மக்கள் மற்றும் மன்னார் தென்கடல் கடற்கரை பக்கம் செல்வோர் இது தொடர்பாக விழிப்புணர்வுடன் செயல்படுமாறும் இவற்றை கேசரிக்கவோ அல்லது இவற்றை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை பண்ணுவதாக மன்னார் கடற்தொழில் நீரியல்வள உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இவைகள் இரசாயன பதார்த்தங்களாக இருப்பதனால் இவைகள் உயிர் சேதன விளைவகளை ஏற்படுத்தும் என்ற நோக்கிலேயே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவைகள் மேலும் கடற்கரையோரங்களில் ஒதுங்குவதை காணும்பட்சத்தில் கடற் திணைக்களத்திற்கோ அல்லது கடல் மாசுப்படும் அதிகார சபைக்கோ அல்லது அரசாங்க அதிபருக்கோ உடனடியாக தகவல்களை தெரிவிக்குமாறு மன்னார் கடற்தொழில் நீரியல்வள உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


