சுவிஸ் தூதரகத்துடன் திட்ட பரிசீலனை கூட்டம்

ஹஸ்பர் ஏ.எச்_

இலங்கை நாட்டுக்கான சுவிஸ்லாந்து தூதரகம் மற்றும் கெபே அமைப்பினருடைய விசேட கலந்துரையாடல் ஒன்று (09)இடம் பெற்றசு. ராஜகிரியவில் அமைந்துள்ள CaFFE அலுவலகத்தில் சுவிஸ் தூதரகத்தைச் சேர்ந்த Justine Boillat (முதல் செயலாளர்) மற்றும் Kannishka Rathapriya (அரசியல் அதிகாரி) ஆகியோர்களுடன் ஒரு திட்ட பரிசீலனை கூட்டம் நடைபெற்றது.

CaFFE சார்பில், நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன், நிர்வாக பணிப்பாளர் சுரங்கி ஆரிவன்ச மற்றும் சட்டத் துறை பொறுப்பாளர் ஹரேந்திர பனகல ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறிப்பாக சமீபத்திய உள்ளூர் தேர்தல்கள், மாகாணசபைகளின் நிலை, மற்றும் உள்ளூர் மட்டத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் ஆளுமை மற்றும் டிஜிட்டல் அறிவு குறித்த கலந்துரையாடல்கள் இதன் போது இடம்பெற்றன.
பலதுறை பங்கேற்புடன் கூடிய வலுவான உள்ளூர் நிர்வாகத்துக்காக ஒன்றிணைந்து செயலாற்றுவது பற்றியும் மேலும் கலந்துரையாடப்பட்டது.