கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டமானது இன்று (09.06.2025) 09.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் ஆரம்பமாகியது. பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய

இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் மற்றும் திணைக்களத் தலைவர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தி செயற்பாட்டுத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன்

எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன. மேலும் பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் தற்போதைய பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.