மன்னாரில் மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் விழிப்புணர்வு

( வாஸ் கூஞ்ஞ) 09.06.2025

உலக சுற்றாடல் சூழல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கடந்த புதன் மற்றும் வியாழன் (04 05) ஆகிய இரு தினங்கள் மாணவர்கள் மத்தியில் சுற்றுச் சூழல் தொடர்பான கருத்தமர்வுகள் இடம்பெற்றன.

வியாழக்கிழமை (05) பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலத்தில் 150 பிள்ளைகளுக்கும் அத்துடன் இதே தினம் காலை 7.25 மணியளவில் 1700 பெண் பிள்ளைகளுக்கு புனித சவேரியார் பெண்கள் பாடசாலையிலும்

இதே தினம் காலை 9 மணியளவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் 300 மாணவர்களுக்கும் சுற்று சூழல் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வுகள் இடம்பெற்றன.

மன்;னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் யூஎன்டிபி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்நிகழ்வுகளை நடாத்தின.

இக்கருத்தரங்கில் குறிப்பாக பொலீத்தீன் பாவனை , காடு அழிப்பு , காபன் ஓட்சைட்டால் ஏற்படும் பாதிப்புக்கள் , சிக்குன்னியா , மலேரியா போன்ற அவதானிப்புக்கள் , சுற்றுச் சூழல் சுகாதாரம் போன்ற பல விடயங்கள் இக்கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டன.