பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கள் தொடர்பான விசேட கலந்தரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு வழங்கள் தொடர்பான விசேட கலந்தரையாடலானது
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்முரளீஸ்வரன் தலைமையில் பிராந்தியசுகாதார சேவை அலுவலகத்தில் (06) இடம் பெற்றது

மட்டக்களப்பு கல்வி வளையத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையினால் 70 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதினை முன்னிட்டு விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இ. உதயகுமாரின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

இதன் போது பாடசாலைகளுக்கு அண்டிய பகுதிகளில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் மற்றும்
உணவு தயாரித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாடசாலைகளுக்கு வழங்க முன் அதனை பாடசாலை உணவுக் குழு கண்காணிக்க வேண்டும் என்பதுடன் இதனை பொதுச் சுகாதார பரிசோதவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் மேலும் ஒரு ஒப்பந்ததாரர் 200 மாணவர்களுக்கு மாத்திரம் உணவு வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என விசேட கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி ஷாமினி ரவிக்குமார், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உணவு வழங்குனர்கள், கல்வித்திணைக்கள உயர் அதிகாரிகள் சுகாதார சேவை திணைக்கள உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.