கொட்டாஞ்சேனை சண்முகேஸ்வரர் குருக்களின் மறைவு பெரும் இழப்பாகும்

மட்டக்களப்பு மாநகரின் அரசாங்க உத்தியோகத்தராக இருந்து அம்பாள் அருள் வாக்கின் மூலம் கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதம குருக்களாக ஆன்மீக கடமையில் இருந்து படிப்படியாக ஆன்மீக சேவைகளை வளர்த்துக் கொண்டு கொழும்பில் மிக நீண்ட காலமாக வசித்து வந்தவர். மேலும் தன்னடக்கமானவர் ,ஆச்சாரம் மிக்கவர் அத்துடன் தனது தொழிலுடன் மிகுந்த பக்தியும் சிரத்தையும் கொண்டவர். ஆகம பூஜைகளை முறையாக கற்று அந்தணருக்குரிய வைதீக கிரியைகளை மிகச் சிறப்பாக செய்து வந்தவர்.

இந்த வகையில் அவரது இழப்பு அந்தணர் குலத்திற்கும் இந்து சமயத்திற்கும் பேரிழப்பாகும். சோதிட துறையிலும் திறமை வாய்ந்தவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தனை செய்வோமாக என சர்வதேச பீடம் சார்பாக அதன் செயலாளர் சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.