தில்லை ஸ்ரீ பத்திரகாளி உடனுறை அருள் வாக்கு அரசி ஆதி ஸ்ரீ கருமாரி அம்பாளுக்கு வைகாசிப்பொங்கல் பூஜைகள் நடைபெற அம்பாள் திருவருள் கூடியுள்ளது. ஜூன் 9ம் திகதி காலை 10.00 மணியளவில் கன்னியா கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க வளந்து பானைகள் பவனியாக எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மாலை 04.00 மணியளவில் வளந்து பானைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
வைகாசிப் பொங்கல் நேர்த்திகடன்கள் செய்ய விரும்பும் அடியார்கள் 09.06.2025 மாலை 04.00 மணி தொடக்கம் அம்பாள் சந்நிதியில் பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் செய்து அம்பாளுக்கு பிரசாதமாக பூஜை செய்து திருவருள் பெற்றுய்யுமாறு வேண்டி நிற்கின்றோம்.


