மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத் தீர்மானத்தை மீறி மணல் அகழ்வு செயற்படக் கூடாது.

( வாஸ் கூஞ்ஞ) 29.05.2025

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் புதன் கிழமை (28) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் பிரதியமைச்சரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களா ரிஷாட் பதியுதீன்இ காதர் மஸ்தான்இ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்இ ஆகியோர் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலாளர்கள்இ அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள்இ பொலிஸ் கடற்படைஇ அதிகாரிகள் சிவில் சமூக அமைப்புக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாட பட வேண்டிய பல்வேறு விடயங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக 2ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில்இ குறித்த விடயம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கணிய மணல் அகழ்வு குறித்து கலந்துரையாடப்பட்டது. எனினும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட மன்னார் பிரஜைகள் குழு மற்றும் மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள் . பாராளுமன்ற உறுப்பினர்கள் ரிஷாட பதியூதின் , காதர் மஸ்தான் ஆகியோர் தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

-கணிம மணல் அகழ்வு மற்றும் மின் உற்பத்தி காற்றாலை மன்னார் தீவில் அமைக்கப்படுவதால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக இந்த மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பல முறை சுட்டிக்காட்டப்பட்டு அவற்றை நிறுத்தக்கோரி பல முறை தீர்மானம் எடுக்கப்பட்டபோதும் மீண்டும் மீண்டும் இது தொடர்பாக இங்கு கலந்துரையாடுவது பொருத்தமில்லை எனவும் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

-அத்துடன் இங்குள்ள அரச அதிகாரிகளும் இந்த விடயங்களில் இவர்களுக்கு துணைநிற்கக் கூடாது எனவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மன்னார் மாவட்ட மக்கள் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்படும் கணிய மணல் அகழ்வை எதிர்ப்பதாகவும் குறித்த விடையம் தொடர்பாக இங்கு ஆராயப்பட வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்ததோடுஇ மன்னார் தீவில் கனிய மண் அகழ்வுக்கு ஒரு போதும் அனுமதியை வழங்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.

இதன் போது மக்களின் எதிர்ப்பை மீறி மாவட்டத்தில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அனுமதி வழங்க முடியாது என்றும்இ குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கனிம மண் அகழ்வு குறித்து மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மையினால் இவ்விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்த உத்தரவு பிறப்பித்ததுடன் மாவட்ட செயலாளர் ஊடக இவற்றை நடைமுறைபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.