பல்லாயிரக் கணக்கான மக்கள் சூழ தரவையில் எழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு…

கார்த்திகை 26 மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்தில் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களில் உணர்ச்சிபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்முறை பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்களிப்பில் மிக உணர்ச்சியுடனும், எழுச்சியுடனும் மாவீரர் தின நிகழ்வு இடம்பெற்றது.

தரவை மாவீரர் துயிலுமில்ல மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வில் சரியாக 06.05 மணிக்கு மாவீரர் ரேணுகரன் அவர்களின் தாய் மலகாந்தி அவர்கள் தீபத்தைக் கொடுக்க, மாவீரர்களான குமரன், அரணிதரன் ஆகியோரின் தந்தையான கணேசன் ஈகைத் தீபம் ஏற்றினார், அதனைத் தொடர்ந்து மாவீரரின் பெற்றோர்கள் இருவரினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மாவீரர் குடும்ப உறவுகள், பொதுமக்கள் மற்றும் அரசியற் பிரமுகர்களால் ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு பிரதான தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.