வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “அமுத விழா நடை பவனி” நாளை 28.11.2026 சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு சிறப்பாக நடைபெறவுள்ளது.
பாடசாலை அதிபர் திருமதி. சு. ஜெயகுமார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் செ. மகேந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சியில் அமுத விழா நினைவுப்பலகை திரை நீக்கம்,
அமுத விழா ஊர்தி ஊர்வலம் ஆரம்பித்து வைத்தல் போன்ற விசேட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வில் பிரதி அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
80 ஆண்டு கால கல்விப் பயணத்தை கொண்டாடும் இந்த அமுத விழா நடை பவனியில், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் கலந்து கொள்ளுமாறு பாடசாலை சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.


