அகில இலங்கை சங்கீத நடனப் போட்டியில் கல்முனை மாணவர்கள் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம்!

( வி.ரி.சகாதேவராஜா)

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான 2026ஆம் ஆண்டுக்கான தேசிய “பிரதீபா” அகில இலங்கை சங்கீத நடனப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தை கல்முனை கலாசார மத்திய நிலைய மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்தவர்கள், தேசிய ரீதியிலும் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தை தமதாக்கிக் கொண்டனர்.

கல்முனை கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி
திருமதி ஜெனீத்ரா தேவச்சந்திரனது ஏற்பாட்டில்,
வளவாளர் திருமதி சர்மினி சுதாகரனது நெறியாள்கை மற்றும் வழிப்படுத்தலுடன் நாட்டிய நாடகம் “கண்ணகி வழக்குரை” அ.கல்யாண்சரன், திருமதி.கோஷல்லியா பிரமீன், என்.குகன் ஆகியோரது வாய்ப்பாட்டு பக்க வாத்தியங்களுடன் ரஞ்சிதன் மதுரா, சிவானந்தன் மியோளினா, ராஜகுமார் டதுஸ்னி, மகேந்திரன் கிவோக்சிகா, ஜீவராசா நாகசதா, கேந்திரன் திலுக்
ஷியா, கருணாநிதி யர்ஷிகா, கிருஷ்ணமூர்த்தி லோஜி ஆகிய மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.