SWISS, Edelweiss பயணிகளுக்கு புதிய மாற்றம்: Online check-in செய்ய Travel ID தேவை

Zurich விமான நிலையத்திலிருந்து SWISS மற்றும் Edelweiss விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, online check-in முறையில் புதிய மாற்றம் அமலுக்கு வருகிறது.

நவம்பர் 16, 2026 முதல், Zurich-இல் இருந்து புறப்படும் flights-க்கு online check-in செய்ய Travel ID login தேவைப்படும். இந்த மாற்றம் Lufthansa Group-ன் digital services திட்டத்தின் ஒரு பகுதியாகும். Lufthansa Group தகவலின்படி, Travel ID படிப்படியாக Lufthansa, SWISS, Austrian Airlines, Brussels Airlines, Air Dolomiti, Edelweiss மற்றும் Discover Airlines ஆகியவற்றின் website/app check-in-களில் தேவையாகிறது.

Travel ID என்பது Lufthansa Group airlines-க்கான ஒரே digital login ஆகும். SWISS விளக்கத்தின்படி, இதன் மூலம் bookings, check-in, travel data மற்றும் Miles & More services போன்றவற்றை ஒரே account மூலம் பயன்படுத்தலாம்.

இந்த மாற்றம் online check-in செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பயணிகள் airport counter அல்லது self-service kiosk மூலம் check-in செய்தால் Travel ID தேவையில்லை.

SWISS மற்றும் Edelweiss online check-in பயன்படுத்த விரும்பும் பயணிகள், இனி பெயர் மற்றும் booking reference மட்டும் போதாது; Travel ID account-ல் login செய்ய வேண்டியிருக்கும். account இல்லாதவர்கள் பயணத்திற்கு முன் register செய்து வைத்திருப்பது நல்லது.

சில விதிவிலக்குகளும் உள்ளன. Group bookings, குறிப்பிட்ட tour operator / charter bookings, மற்ற airline tickets, அல்லது Lufthansa Group ticket-ல் இருந்தாலும் வேறு airline இயக்கும் flights ஆகியவற்றில் வேறுபட்ட நடைமுறை இருக்கலாம்.

சுபீட்சம் குறிப்பு:
SWISS அல்லது Edelweiss flight-க்கு online check-in செய்ய நினைப்பவர்கள், பயண நாளுக்கு முன்பே Travel ID account உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். Travel ID வேண்டாம் என்றால் airport counter அல்லது self-service kiosk வழியாக check-in செய்யலாம்.