“திரியமன் பெத்த” சிறப்புப் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2026 ஆண்டு பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்களுக்கான “திரியமன் பெத்த” சிறப்புப் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான இரு நாள் பயிற்சிகள் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (16) வழங்கப்பட்டது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், உதவி மாவட்டச் செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் மேற்பார்வையில், மாவட்ட மகளிர் அபிவிருத்தி இணைப்பாளர் எஸ். அருணாளினியின் ஏற்பாட்டில் இப்பயிற்சி நெறி முன்னெடுக்கப்பட்டது.

பெண்களின் வாழ்வாதாரத்தையும் உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான செயற்திட்டத்தை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒர் அங்கமாக மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பெண் பயனாளிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இதன் போது கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்த்தாக்கம் தொடர்பான விளக்கங்கள் மற்றும் நோய் தடுப்பு தொடர்பான விளக்கங்கள் இதன் போது வழங்கப்பட்டது.

இந் நிகழ்வின் வளவாளராக அரச கால்நடை வைத்தியர் திருமதி சுபாசுகி ரங்கநாதன் அவர்களினால் பயனளிகளுக்கான தெளிவூட்டல்களை மேற்கொண்டார்.

இந் நிகழ்வில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் சிங்கராசா, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.