(வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு புதிய இரண்டு தாதிய பரிபாலகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கான வரவேற்பு விழா நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
தாதிய உத்தியோகத்தர்கள் இப் பெரு வரவேற்பையளித்தனர்.
காரைதீவைச் சேர்ந்த திருமதி கௌரி நவநீதன் மட்டக்களப்பைச் சேர்ந்த திருமதி மதிவதனி விக்னேஸ்வரன் ஆகியோரே புதிதாக நியமிக்கப்பட்ட பரிபாலகிகளாவர்.
இதேவேளை, அங்கு கடந்து எட்டு வருட காலமாக தாதிய பரிபாலகராக சிறந்த பணியாற்றிய நல்லதம்பி சசிதரன் திருகோணமலை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றலாகி செல்கிறார்.
அவரை வழியனுப்பும் நிகழ்வும் நடைபெற்றது.


