உயரம் பாய்தல் தேசியப் போட்டியில் சாதித்த யாழ்ப்பாணம் இளைஞன் ரூபன்விமல்ராஜ் வினோஜன்

சண்முகம் தவசீலன்
2026.11.01
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகிய இணைந்து நடாத்தும் 36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இம்முறை ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் நேற்று முந்தினம் (30) மாலை ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகிறது

குறித்த இந்த விளையாட்டு விழாவில் நேற்று (31)இடம்பெற்ற ஆண்களுக்கான உயரம்பாய்தல் போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபன்விமல்ராஜ் வினோஜன்
மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊர்காவற்துறை கதிர்கள் இளைஞர் கழகத்தை சேர்ந்த ரூபன்விமல்ராஜ் வினோஜன் நேற்றையதினம் இடம் பெற்ற குறித்த ஆண்களுக்கான உரம் பாய்தல் போட்டியில் பங்கு பற்றி உயரத்தை பாய்ந்து மூன்றாம் இடத்தை பெற்று வெங்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்ட தோடு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்