( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா)
கதிரவன் கலைக் கழகத்தின் 50ஆவது ஆண்டு நிகழ்வுகளின் தொடரில் 63ஆவது நிகழ்வாக, திரு. ம. வேதநாயகம் எழுதிய ‘முப்பத்தியெட்டாம் கொலனி’ குறுநாவல் வெளியீட்டு விழாவும், திருமதி சுந்தரமதி வேதநாயகம் எழுதிய தேசிய விருது பெற்ற ‘முயலாமை’ சிறுவர் கதை நூல் அறிமுக நிகழ்வும் மட்டக்களப்பு, கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில், சிறப்பாக நடைபெற்றன.


