கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற 6வது நல்லையா நினைவுப்பேருரை நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மக்களின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள் முதலானவற்றில் விருத்திபெற அயராது உழைத்த அரசியல் ஆளுமையான வல்லிபுரம் நல்லையா அவர்களின் நினைவாக கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தால் வருடந்தோறும் நிகழ்த்தப்படுகின்ற நினைவுப் பேருரை இவ்வருடமும் சிறப்பாக ஒழுங்கமைப்பட்டு (28.10.2026) கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க.சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறைப் பேராசிரியர் சின்னத்தம்பி சந்திரசேகரம் அவர்கள் ‘தன்வரலாற்று எழுதியலும் ஈழத்துத் தமிழ் தன்வரலாறுகளின் சமூகப் பெறுமானமும்’ என்னும் தலைப்பில் நினைவுப் பேருரையினை ஆற்றினார்.

அப்பேருரையானது இதன்போது நூலாக வெளியிடப்பட்டதுடன், இவ்வாண்டுக்கான நினைவுப் பேருரையின் இணைப்பாளர் பாஸ்கரன் சுமன் அவர்கள் சிறப்பான வகையில் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.