எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தற்காலத்தில் சிறுவர்கள் மத்தியில் தமது பாதுகாப்பு பொறிமுறைகள் மற்றும் ஆபத்தான சூழலுக்கு முகம் கொடுக்க கூடிய வேளையில் பாதுகாப்பு பெறும் படிமுறைகள் மற்றும் சிறுவர்களுக்குரிய கடமைகள், பொறுப்புகள், கட்டாயக் கல்வியின் அவசியம் முதலான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டிளமைப்பருவ சிறுவர்களுக்கு அறிவூட்டலை வழங்கி அவர்களை தற்கால சூழலுக்கு முகங்கொடுக்ககூடிய வகையில் தயார்படுத்த வேண்டிய தேவைப்பாடு உணரப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம், பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்துடன் இணைந்து பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் மண்முனை தென் எருவில்பற்று கோட்டத்திற்குட்பட்ட தரம் 10ல் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கு மேற்படி விடயங்களை கருப்பொருளாக கொண்டு பரீட்சை முறையின் ஊடாக அவர்களது அறிவுத்திறன் மற்றும் மனப்பாங்கு விருத்தியினை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்த பரீட்சை அண்மையில் (2026.10.23) இடம்பெற்றது.
சிறுவர் உரிமைகள் மற்றும் இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு சட்ட ஏற்பாடுகள், சிறுவர் பாதுகாப்பு பொறிமுறைகள், சிறுவர்கள் தொடர்பான சமகால போக்குகள், சிறுவர்களுடைய கடமைகளும் பொறுப்புக்களும், குழந்தை விருத்தி படிநிலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய ஏனைய விடயங்களையும் கருப்பொருளாக கொண்டு வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சகல ஒழுங்கமைப்புகளையும் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ம. புவிதரன் மேற்கொண்டிருந்தார்.


