‘முப்பத்தியெட்டாம் கொலனி’ குறுநாவல் வெளியீட்டு விழாவும், ‘முயலாமை’ சிறுவர் கதை நூல் அறிமுக நிகழ்வும் !

( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா)

கதிரவன் கலைக் கழகத்தின் 50ஆவது ஆண்டு நிகழ்வுகளின் தொடரில் 63ஆவது நிகழ்வாக, திரு. ம. வேதநாயகம் எழுதிய ‘முப்பத்தியெட்டாம் கொலனி’ குறுநாவல் வெளியீட்டு விழாவும், திருமதி சுந்தரமதி வேதநாயகம் எழுதிய தேசிய விருது பெற்ற ‘முயலாமை’ சிறுவர் கதை நூல் அறிமுக நிகழ்வும் மட்டக்களப்பு, கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில், நேற்று(27) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றன.

கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆன்மீக விருந்தினராக நாவற்குடா ஸ்ரீ கங்காணிப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ உ. ஜெயகிருஷ்ணா கலந்து சிறப்பித்தார். முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் பங்கேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தேசிய சுவடிக்கூடத் திணைக்களப் பணிப்பாளர் சி. புவனேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக மக்கள் வங்கி ஓய்வூதிய சங்கத் தலைவர் பி.எஸ். ஜெயந்திரா, செயலாளர் எஸ். யோகராஜா, ஆலோசகர் கு. குலேந்திரராசா, மாவட்ட ECCD இணைப்பாளர் வீ. முரளிதரன், நடராஜர் சைவசித்தாந்த பயிற்சி மையத் தலைவர் சைவப்புலவர் சிவானந்தஜோதி ஞானசூரியம், ஓய்வுநிலை அதிபரும் சைவ மங்கையர் கழகத் தலைவருமான திலகவதி ஹரிதாஸ், ஓய்வுநிலை அதிபர் சைவப்புலவர் மனோன்மணி தட்சணாமூர்த்தி, ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் மலர்தேவி குருபரன் மற்றும் நாவற்குடா தருமரெட்ணம் வித்தியாலய அதிபர் சுமதி பத்மநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

நூல்களின் முதற்பிரதிகளை மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி. றஞ்சிதமூர்த்தி மற்றும் ஓய்வுநிலை அதிபர் சைவப்புலவர் விஜயலெட்சுமி இராமச்சந்திரா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நூல்களுக்கான நயவுரைகளை கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் இணைப்பாளர் பாலமீன்மடு இரா. கலைவேந்தன் மற்றும் பேரவையின் செயலாளர் கவிஞர் அழகு தனு ஆகியோர் நிகழ்த்தினர்.

தொடர்ந்து, நூலாசிரியர்கள் தமது ஏற்புரைகளை வழங்கினர். நிகழ்வின் நிறைவில் கலைக் கழகத்தின் செயலாளர் புதுவையூர் பு. தியாகதாஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.