மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் சபை உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் வதிவிட செயலமர்வானது உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் தலைமையில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரி.மதிராஜ் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகமானது சர்வதேச சிறுவர் தினம் 2026 முன்னிட்டு மாவட்ட சிறுவர் சபை உறுப்பினர்களின் ஆளுமை மற்றும் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட சிறுவர் சபை உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் வதிவிட செயலமர்வுகள் இடம் பெற்றதுடன் மாவட்ட சிறுவர் சபை மீளமைப்பும் மேற்கொள்ளப்பட்டது .
இச் செயலமர்வில் பிள்ளைகளது சுகாதாரம், கலை விருத்தி, தலைமைத்துவ பயிற்சி மற்றும் யோகா பயிற்சி என்பன துறைசார் வல்லுனர்கள் பங்களிப்புடன் இடம்பெற்ற நிகழ்வில் சான்றிழிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


