மணற்சேனை ஸ்ரீ வீரபத்திர மகா காளியம்மன் ஆலயத்தில் அம்மன் சிலை பிரதிஷ்டை பெருவிழா

( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட பொத்துவில் மணற்சேனை ஸ்ரீ வீரபத்திர மகாகாளியம்மன் ஆலயத்தில் புதிய அம்மன் சிலை பிரதிஷ்டை பெருவிழா நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை பக்தி பூர்வமாக நடைபெற்றது.

பாரத தேசத்திலிருந்து கொண்டு வரப்பட்டு, கல்முனை பாண்டிருப்பு வடபத்திர காளியம்மன் ஆலயத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட அம்மன் சிலை, நேற்று முன்தினம் (25.10.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரையிலான அமிர்த சித்தி சுப முகூர்த்தத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மணற்சேனை ஊர்த் தலைவருமான ஆலய தலைவருமான தமிழ்ச்செல்வன் தலைமையில், காரைதீவைச் சேர்ந்த அம்மன் பக்தை திருமதி மோகனா கவிந்திரராஜ்ஜின் ஏற்பாட்டில் இந்த கற் சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு மணற்சேனை மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து அம்மன் சிலையுடன் கலாசார வாத்தியங்கள் முழங்க மாபெரும் பால்குட பவனி ஊர்வலம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து எண்ணெய்க் காப்பு,கும்பாபிஷேகம், விசேட பூஜைகள், அன்னதானம் என்பன நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம பூசகராக சக்தி உபாசகர் தங்க வடிவேல் தர்ஷன் ஆலய பூசகராக லிங்கராசா தயாபரன் , கிரியை யாக பூஜை பிரதமகுரு சிவஸ்ரீ அடியவன் க.வி. பிரமின்சிவம் குருக்கள் கலந்து கொண்டு செயற்பட்டார்கள்.

மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய ஆலோசகர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா, தலைவர் கே.ஜெயசிறில், சமய ஆர்வலர் வெ.
ஜெயகோபன் ஆகியோர் விசேட சொற்பொழிவு ஆற்றினார்கள்.

காரைதீவில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர.