உயிருக்குப் போராடிய காட்டு யானை மூன்று நாட்களில் உயிரிழப்பு!

( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வயல் பகுதியில் மூன்று நாட்களாக நோய்வாய்ப்பட்டு கிடந்த காட்டு யானை தீவிர மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் இன்று (24) சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

கடந்த புதன்கிழமை (21) நோய்வாய்ப்பட்டு கிடந்த நிலையில் கண்டறியப்பட்ட குறித்த ஆண் யானையைக் காப்பாற்றுவதற்காக அம்பாறை மாவட்ட கால்நடை மருத்துவக் குழுவினர் வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ச்சியான சிகிச்சைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இறந்த யானையின் உடக்கூற்று பரிசோதனைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.