புதிய கல்வித் தரவுகள் ஓர் ஒப்பிட்டாய்வு! வினா விடை குறிப்பு வடிவில்..

01. முன்மொழியப்பட்டுள்ள புதிய தேசிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, இலங்கையின் பாடசாலைக் கல்விக்காலம் எத்தனை வருடங்களாகக் குறைக்கப்படவுள்ளது?

விடை: 12 வருடங்களாக (தற்போது 13 வருடங்களாக உள்ளது).

02. புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சையை எந்தத் தரத்தில் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது?
விடை: தரம் 10 இல் (தற்போது தரம் 11 இல் நடைபெறுகிறது).

03. இலங்கைப் பாடசாலைகளில் ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence – AI) பாடத்தை அறிமுகப்படுத்துவதற்காக கல்வி அமைச்சு எந்த சர்வதேச தொழில்நுட்ப நிறுவனத்துடன் உத்தியோகபூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளது?

விடை: மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம்.

04. புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், க.பொ.த உயர்தரப் (A/L) பரீட்சையை எந்தத் தரத்தில் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது?
விடை: தரம் 12 இல் (தற்போது தரம் 13 இல் நடைபெறுகிறது).

05. நவீன கல்வி முறையில் பாடசாலைகளில் பரவலாக ஊக்குவிக்கப்படும் ‘STEAM’ கல்வியின் விரிவாக்கம் என்ன?
விடை: Science (விஞ்ஞானம்), Technology (தொழில்நுட்பம்), Engineering (பொறியியல்), Arts (கலை), Mathematics (கணிதம்).

06. இலங்கை கல்வி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் உத்தியோகபூர்வ தேசிய மின்-கற்றல் தளம் (National e-learning portal) எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை: இ-தக்சலாவ (e-Thaksalawa).

07. பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவச மதிய போசனத் திட்டம் எந்த வகுப்பு மாணவர்களுக்கு முழுமையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது?
விடை: தரம் 1 முதல் 5 வரையான ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு.

08. பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச மருத்துவ மற்றும் விபத்துக் காப்புறுதித் திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை: சுரக்ஷா காப்புறுதி (Suraksha Insurance).

09. 21 ஆம் நூற்றாண்டுத் திறன்களில் (21st Century Skills) பிரதானமாகக் கருதப்படும் “4C” கள் எவற்றைக் குறிக்கின்றன?
விடை: Communication (தொடர்பாடல்), Collaboration (கூட்டிணைவு), Critical Thinking (விமர்சனச் சிந்தனை), Creativity (ஆக்கத்திறன்).

10. பாடசாலை மாணவர்களை உடல் அல்லது உள ரீதியாகத் தண்டிப்பதை (Corporal Punishment) முற்றாகத் தடை செய்வதற்காக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட பிரதான சுற்றறிக்கையின் இலக்கம் என்ன?
விடை: சுற்றறிக்கை இலக்கம் 12/2016.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா.
ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் & சிரேஸ்ட ஊடகவியலாளர்
காரைதீவு