சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் புனிதத்தன்மையை மீறித் தவறான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, பங்களாதேஷை சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து எந்த வித முன்னறிவிப்பும் வழங்காமல் சவூதி அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளதாக பங்களாதேஷ் அரசு பலத்த கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சவூதி அரேபியத் தூதுவரை நேரில் அழைத்து பங்களாதேஷ் அரசு விளக்கம் கேட்டுள்ளது.
சவூதி அரசின் இந்த நடவடிக்கைக்கு பங்களாதேஷ் மக்கள் மற்றும் சமூக வலைத்தளப் பயனாளர்கள் தீவிர கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.


