எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட சுகாதார அமைச்சின் இணைப்பாளருமான கந்தசாமி பிரபு அவர்கள் போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள (யௌவன )
இளைஞர் நட்புறவு சுகாதார சேவை நிலையத்தினை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.
இந் நிலையத்தின் மூலம் இளைஞர்களுக்கு தேவையான சேவைகள் நட்பு ரீதியாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது இந் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சேவைகள் தொடர்பான தெளிவூட்டல்களை துறைசார் நிபுணர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி பிரபு அவர்களினால் இதன் போது மேற்பார்வை அதிகாரிகளுக்கான நிலையத்தினையும் வைத்திய சாலையில் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


