அரச தகவல் திணைக்களத்தின் ஊடகப் பயிற்சிப் பட்டறை

(அஷ்ரப் ஏ சமத்)

அரச தகவல் திணைக்களத்தின் ஆராய்ச்சிப் பிரிவினால் ஏற்பாட்டில் தேசிய பத்திரிகையின் உள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள முப்படைகளின் ஊடகப் பிரிவு அதிகாரிகளுக்கு குறுகிய கால டிஜிட்டல் ஏ.ஜ மற்றும் செய்தித் திறன் பற்றிய ஊடகப் பயிற்சிப் பட்டறை 4 நாட்கள் நடாத்தியது.

இப் பயிற்சிப் பட்டறையில் இலங்கையில் உள்ள தேசிய பத்திரிகையில் உள்ள ஊடகவியலாளர்கள் ராணுவம், விமானப்படை, கடற்படை பொலிஸ் ஆகியவற்றின் உள்ள ஊடகப் பிரிவின் அதிகாரிகள் கொண்ட 70 ஊடகவியலாளர்கள் இப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர

இப் பயிற்சி பட்டறைகள் பல்கழைக்கழக டிஜிட்டல் ஏ.ஜ. சட்டிபிட்டி போன்ற துறைகளின் பேராசிரியர்கள், தினமின, லங்காதீப,மோணிங் .டெய்லிமிரர் போன்ற பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் சமரக்கொடி கடற்துறை சம்பந்தப்பட்ட சந்தன கெத்தொட்டுவ .தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரதிப் பணிப்பாளர் களும் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினார்கள் அத்துடன் கடந்த வாரம் பயிற்சி வெற்றிகரமாக முடித்த ஊடகவியலாளர்களுக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கூட்ட மண்டபத்தில் வைத்து சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்டப்டடன.