Tear Drop Nation’ ஆவணத் திரைப்படம் பெரிதும் கைகொடுக்கும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாடு என்ற ரீதியில் தவறாக நடந்த விடயங்கள் எவை, சரியாக நடத்த விடயங்கள் எவை என்பவற்றைப் புரிந்துகொள்வதற்கு Tear Drop Nation திரைப்படத் தொடர் முக்கியமானதென்றும், இதன் மூலம் எல்லாவற்றையும் விமர்சன ரீதியாகவும், சுயவிமர்சன ரீதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நேர்மையாகவும் தரமாகவும் கேள்வி எழுப்பி, இத்திரைப்படம் மூலம் பெற்றுத் தரப்படும் பாடங்களைக் கற்றுக்கொண்டு நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்ல வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஸாரா கபீர் தனது தனிப்பட்ட அரசியல் கருத்துக்களை ஒதுக்கிவைத்துவிட்டு, பாரபட்சமின்றி, உண்மையாக, வெளிப்படைத்தன்மையுடன் தனது கலை பணியை ஆற்றியுள்ளார். ஆனபடியால், Tear Drop Nation திரைப்படம் பெற்றுத் தரும் பாடத்தை சரியாகப் புரிந்துகொண்டு, நாட்டுக்காகவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும், ஒட்டுமொத்த மக்களையும் சுபீட்சமடையச் செய்வதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சரா கபீர் அவர்களால் தயாரிக்கப்பட்ட Tear Drop Nation திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.