நம்பிக்கையில்லா பிரேரணையில் இன்று கையெழுத்து

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையளிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

49 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் கையொப்பமிடும் நடவடிக்கைகள் இன்று (06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு முன்னர், அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.