இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழா ரதபவனி காரைதீவில் கோலாகலமாக ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை (1926-2026) முன்னிட்டு தெய்வீக ரத ஊர்வலம் இன்று று (3) சனிக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமானது.

இந்த புனித ரத ஊர்வலம் காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் சாரதா இல்லத்தில் இருந்து தொடங்கியது.

மட்டக்களப்பு மாநில இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி முன்னிலையில் ரதபவனி ஆரம்பமானது.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியர் மற்றும் வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் ஆகியோரது த திருவுருவங்களை தாங்கிய ரதபவனி பவனியில் வந்தன.

இன்று 03.10.2026 சனிக்கிழமை: காரைதீவு முதல் குருக்கள்மடம் வரையும் நாளை
04.10.2026 ஞாயிற்றுக்கிழமை குருக்கள்மடம் முதல் கல்லடி-உப்போடை வரை ரதபவனி இடம்பெறும்.

வழி நெடுகிலும் ரதபவனியை வரவேற்று பூரண கும்பம் மரியாதை, மாலை அணிவித்தல், ஆரத்தி போன்ற வழிபாட்டு முறைகளின் மூலம் பக்தர்கள் பக்தியையும் அன்பையும் வெளிப்படுத்தினர்.