அமெரிக்கத் தூதரகக் அரசியல் பொறுப்பாளருடன் சாணக்கியன் சந்திப்பு

அமெரிக்கத் தூதரக அரசியல் பொறுப்பாளர் ரேச்சல் ஹக்கின்ஸ் அவர்களை , இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று (30.09.2026) மட்டக்களப்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பில் வடக்கு–கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்பு, நெடுஞ்சாலைகள், வீதிகள் மற்றும் உள்ளூர் வீதிகள் தொடர்பான தேவைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு பெரும் உதவியாக காணப்படும்.

மேலும், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களிடையே நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம், அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.