சாதாரணக் கண்ணாடிபோல் தோன்றும் ‘Smart Glasses’ — ரகசியப் படப்பிடிப்பு குறித்து கவலை

சூரிச்: கேமரா பொருத்தப்பட்ட Smart Glasses சாதாரணக் கண்ணாடியைப் போலவே தோன்றுவதால், பிறருக்குத் தெரியாமல் படம்பிடிக்க அவற்றைப் பயன்படுத்த முடியும். குறிப்பாகப் பெண்களை ரகசியமாகப் படம்பிடித்து காணொளிகளை இணையத்தில் பகிர்வது குறித்த கவலை எழுந்துள்ளது.

இது ஒருவரின் தனியுரிமைக்கும் தனது படம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கும் உரிமைக்கும் அச்சுறுத்தல் என்று AlgorithmWatch CH அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் ஸ்டெஃபனி கைகாக்ஸ் கூறியுள்ளார். பதிவு செய்யப்பட்ட காட்சிகள் இணையச் சேமிப்பகத்திற்குச் சென்ற பிறகு அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.

சூரிச்சில் பொதுவிடங்களில் இக்கண்ணாடிகளால் படம்பிடிப்பதைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தடை மட்டும் பிரச்சினையைத் தீர்க்காது என்பது கைகாக்ஸின் கருத்து. பெண்களுக்கு எதிரான தவறான நடத்தையைத் தடுப்பதுடன், சாதன உற்பத்தியாளர்களும் சமூக வலைத்தள நிறுவனங்களும் தங்கள் பொறுப்பை ஏற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்