சாய்ந்தமருதைச் சேர்ந்த மாணவன் சம்ஹான் சவூதி அரேபிய தாயிப் பல்கலைக்குத் தெரிவு

எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மாவனல்லை ஷரபிய்யா அரபுக் கல்லூரி மாணவன் சாய்ந்தமருதூரைச் சேர்ந்த ஏ.எம். சம்ஹான் சவூதி அரேபியாவில் உள்ள தாயிப் பல்கலைக்கழகத்தின் குர்ஆன் அறிவியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், மாவனல்லை ஷரபிய்யா அரபுக் கல்லூரியில் தனது இஸ்லாமியக் கல்வியைப் பெற்றதுடன், புனித அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாபிழ் மற்றும் மெளலவி ஆவார்.

தனது உயர் கல்வியைத் தொடர்வதற்கு அங்கு பயணமாகியுள்ள இவர், சாய்ந்தமருது இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலின் முன்னாள் இமாமாகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.சீ. இஸ்திகார் அவர்களின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.