சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு பணம் அனுப்பியவர் கைது!

2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரையிலான காலப்பகுதியில், எவ்வித பொருட்களையும் இறக்குமதி செய்யாமல் ஆறு போலி நிறுவனங்கள் மூலம் தந்தி வழிப் பணப் பரிமாற்றம் செய்து 24.8 பில்லியன் ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டிகாவத்தை பகுதியில் வைத்து நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.