( வி.ரி.சகாதேவராஜா)
குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றிற்காக 11வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினரால் (11 SLNG) நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, அம்பாறை இறக்காமம் இலுக்குச்சேனையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த வீடு கையளிப்பு வைபவத்தில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் W.M.N.K.D. பண்டார பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த திட்டத்திற்கான நிதி உதவியை பிரதேச நன்கொடையாளர்கள் வழங்கியிருந்த நிலையில், வீட்டின் நிர்மாணப் பணிகளை 11வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டிருந்தனர்.
வீடு கையளிப்பு வைபவத்தின் போது பயனாளிக்கு அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


