எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 206A பிறைந்துரைச்சேனை வடக்கு கிராம சேவகர் பிரிவில், பிரதேச முதியோர்களுக்கான ஆயுர்வேத மருத்துவ முகாம் நேற்று (09) புதன்கிழமை நடைபெற்றது.
பதுறியா ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற இம்மருத்துவ முகாம், பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் அவர்களின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது முதியோர்களுக்கு ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டதுடன், அவர்களின் உடல்நலம் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் சேவைகளைப் பெற்றதுடன், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. நஜீம், ஆயுர்வேத வைத்தியர்கள், ஆயுர்வேத நிலைய உத்தியோகத்தர்கள், முதியோர் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், 206A முதியோர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


