(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அல்ஹுஸைன் பாடசாலை வீதியில் அமைந்துள்ள வடிகான்களைச் சுத்தப்படுத்தும் நிகழ்வு காரைதீவு பிரதேச சபையினால் நேற்று (08) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் காலங்கள் மழை காலம் என்பதால் காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் அவர்களின் முயற்சியினால் இந்த வடிகான்கள் முன்கூட்டியே சுத்தப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வடிகான்களை சுத்தப்படுத்தியமைக்காக காரைதீவு உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் அவர்களுக்கு பிரதேசவாசிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.


